A.P.Mathan / 2015 ஜூன் 03 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா நடுவரான ஸ்டீவ் டேவிஸ் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 63 வயதான டேவிஸ் 25 வருடங்களாக நடுவராக கடமையாற்றியுள்ளார். நடைபெறவுள்ள, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இவர் நடுவராக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஸ்டீவ் டேவிஸ் கடமையாற்றியுள்ளார்.
கஷ்டமான முடிவாக இருக்கின்ற போதும் நிதானமான முடிவு இது என டேவிஸ் கூறியுள்ள அதேவளை, வாய்ப்பு வழங்கிய கிரிக்கெட் அவுஸ்திரேலியா, சர்வதேசக் கிரிக்கெட் பேரவை ஆகியவற்றுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த வைப்பின் மூலம் போட்டிகளிலும், வெளியாலும் ஏராளமான நண்பர்களை நான் சந்தித்துள்ளேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .