2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்

A.P.Mathan   / 2015 ஜூன் 03 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக முன்னாள் மித வேகப் பந்துவீச்சாளர் சார்ல்ஸ் லங்கவெல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய அலன் டொனால்ட், அண்மையில் குறித்த பதவியிலிருந்த விலகியிருந்தார். அதன் பின்னரே  சார்ல்ஸ் லங்கவெல்ட் - குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

72 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ள 40 வயதான இவர், 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 9 டுவென்டி டுவென்டி போட்டிகளில் 17 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சார்ல்ஸ் லங்கவெல்ட் - தென் ஆபிரிக்கா அணிக்காக டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .