2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டிடம் வீழ்ந்தது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2015 ஜூலை 26 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட்-பார்சிலோனா அணிகளுக்கிடையில் கலிபோர்னியா சந்தா கிலாரா லெவி அரங்கில் இடம்பெற்ற போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் ஆரம்பித்து எட்டாவது நிமிடத்தில் ஆஷ்லி யங் அடித்த மூலையுதையை தலையால் முட்டி வெய்ன் ரூனி மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக முதலாவது கோலைப்பெற்றார். அவர் தனது 8 ஆட்டங்களில் பெறும் முதலாவது கோலைப்பெற்றார்.

ஆட்டத்தின் ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான்கால் முழு பதினொருவர் கொண்ட அணியையும் மாற்றி உடனேயே டைலர் பிளக்கெட்சிடம் இருந்து பந்தைப்பெற்ற ஜெஸ்ஸி லிங்கர்ட் கோலினைப்பெற அவ்வணி 2-0 என்றநிலையில் முன்னிலை பெற்றது.

இறுதியில் பார்சிலோனா அணியின் ரஃபின்கா ஒரு கோலைப்பெற்ற போதும், அட்னான் ஜனுசாஜ் பெற்ற கோலுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

பார்சிலோனா அணியில் மெஸ்ஸியும், நெய்மரும் விளையாடாத நிலையில், லூயிஸ் சுராஸ் அடித்த பந்து இரு தடவை கோல்கம்பத்தில் பட்டு திரும்பியும், ஒரு முறை ஓஃப் சைட் கோல் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி சார்பாக காயத்திலிருந்து மீண்ட கோல்காப்பாளர் டேவிட் கியா பங்கேற்றபோதும், பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு செல்லப்போகிறார் என தகவல்கள் வெளியான அஞ்சேல் டி மரியா பங்கேற்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .