2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சந்திமால், திரிமான்ன நீக்கம்

Shanmugan Murugavel   / 2015 ஜூலை 23 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இலங்கையின் உப தலைவர் லஹிரு திரிமான்ன, முன்னைய அணித்தலைவர் டினேஷ் சந்திமால் இருவருக்கும் இடம் வழங்கப்படவில்லை. இருவரும் அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மறுபுறத்தில், அண்மைக்காலமாக இலங்கைக் குழாமில் சேர்க்கப்படாமலிருந்த வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவுக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல், இறுதியாக 2012ஆம் ஆண்டில் இலங்கைக்காக விளையாடியிருந்த சாமர கப்புகெதரவும் இக்குழாமில் அழைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு மேலதிகமாக, பினுர பெர்னான்டோ, தசுன் ஷானக, ஜெப்றி வன்டர்சே, ஷெஹான் ஜெயசூரிய, தனஞ்சய டீ சில்வா ஆகிய, இதுவரை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றாத வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, எதிர்வரும் 30ஆம் திகதியும், அடுத்த போட்டி ஓகஸ்ட் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளன.

குழாம்: லசித் மலிங்க, திலகரட்ண டில்ஷான், குசால் பெரேரா, கித்துருவன் விதானகே, தனஞ்சய டீ சில்வா, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக, சாமர கப்புகெதர, ஷெஹான் ஜெயசூரிய, திஸர பெரேரா, ஜெப்றி வன்டர்சே, நுவான் குலசேகர, பினுர பெர்னான்டோ, சத்துரங்க டீ சில்வா, மிலிந்த சிரிவர்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .