Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. எனினும், மூன்றாவது போட்டியில் பதிலடி வழங்கிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்றால், இத்தொடரைக் இங்கிலாந்து அணி கைப்பற்ற முடியும். மறுபுறத்தில், வெற்றி தோல்வியற்ற அல்லது வெற்றி என்ற முடிவை நோக்கி அவுஸ்திரேலியா களமிறங்குகிறது.
இங்கிலாந்தின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விலக வேண்டி ஏற்பட்டமை, இங்கிலாந்துக்குப் பின்னடைவை வழங்கியுள்ளது.
மறுபுறத்தில், பலவீனமான துடுப்பாட்ட வரிசை, அவுஸ்திரேலியாவுக்குத் தலையிடியை வழங்கியுள்ளது. குறிப்பாக, அணித்தலைவர் மைக்கல் கிளார்க்கின் மோசமான ஃபோர்ம், அவ்வணிக்கு மாபெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அணிகள்:
அவுஸ்திரேலியா: கிறிஸ் றொஜர்ஸ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், ஷோன் மார்ஷ், மைக்கல் கிளார்க், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், மிற்சல் ஜோன்சன், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்.
இங்கிலாந்து: அடம் லைத், அலஸ்டெயர் குக், இயன் பெல், ஜோ றூட், ஜொனி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர், மொயின் அலி, மார்க் வூட், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ஃபின்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .