2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இறுதியில் பெடரர்-ஜோகோவிச், செரீனா-ஹல்ப்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்சினாட்டி மாஸ்டேர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டிக்கு சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரும், சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும் தகுதிபெற்றுள்ளவேளை, பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸூம், ரோமானியாவின் சிமோனா ஹல்ப்பும் தகுதிபெற்றுள்ளனர்.

இந்த வாரம் தன்னை பின்தள்ளி தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய பிரித்தானியாவின் அன்டி முரேயை 6-4 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அரையிறுதியில் தோற்கடித்தே பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். முரேக்கு எதிரான கடைசி 5 போட்டிகளிலும் வென்றுள்ள பெடரர் 14-11 என்ற வெற்றி, தோல்வியை கொண்டுள்ளார்.

இதேவேளை அடுத்த அரையிறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள நோவாக் ஜோகோவிச், 4-6 7-6 (7-5) 6-2 என்ற செட் கணக்கில் உக்ரேனின் அலெக்ஸ்சாண்டர் டொல்கோபொலவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

பெண்கள் பிரிவில் தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள செரீனா 6-4 6-3 என்ற செட் கணக்கில் பதின்நான்காம் இடத்திலுள்ள உக்ரேனின் எலினா சுவிட்டோலினாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சமயம், மற்றொரு அரையிறுதிப்போட்டியில் சிமோனா ஹல்ப் 6-1 6-2 என்ற செட் கணக்கில் ஜெலீனா ஜாங்கோவிக்கை தோற்கடித்து  இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .