2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

2022ஆம் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவது குறித்து மெஸ்ஸி உறுதியில்லை

Editorial   / 2019 ஜூன் 02 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து உறுதியில்லாமலுள்ளதாக ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர முன்களவீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள 32 வயதான லியனல் மெஸ்ஸி, இன்னும் மூன்றாண்டுகளில் ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான உடற்றகுதியுடன் இருப்பேனா எனத் தெரியாது என்றவாறான கருத்தை லியனல் மெஸ்ஸி வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்ஜென்டீனாவுக்காக 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் லியனல் மெஸ்ஸி, 129 போட்டிகளில் விளையாடி 65 கோல்களைப் பெற்றுள்ள நிலையில், தான் உலகக் கிண்ணத் தொடரின் நாயகனாகத் தெரிவான 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியதே உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த அடைவு மட்டமாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுடன் ஆர்ஜென்டீனா வெளியேறியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .