2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

2ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்றது அயர்லாந்து

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பெல்பாஸ்டில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், நஜிபுல்லா ஸட்ரான் 42 (52), அஸ்கர் ஆப்கான் 39 (82), ரஹ்மத் ஷா 32 (69) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் முர்டாக் 4, சிமி சிங், பீற்றர் சேஸ், கெவின் ஓ பிரயன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 43.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், அன்டி போல்பிரயன் 60 (92), போல் ஸ்டேர்லிங் 39 (50), சிமி சிங் ஆட்டமிழக்காமல் 36 (59) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் கான் 3, மொஹமட் நபி 2, அப்தாப் அலம், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .