Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்திய பின்களவீரரான ஜோன் ஸ்டோன்ஸும் அக்கழகத்தின் காயப் பிரச்சினைகளில் சேர்ந்துள்ளதையடுத்து ஒரெயொரு உடற்றகுதியிலான மத்தியபின்களவீரரையே தனது கழகம் கொண்டிருப்பதை மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டிலோ வெளிப்படுத்தியுள்ளார்.
முழங்கால் சத்திரசிகிச்சையொன்றுக்குள்ளான மன்செஸ்டர் சிற்றியின் இன்னொரு மத்தியபின்களவீரரான அய்மரில் லபோர்ட்டே இவ்வாண்டு முடிவு வரையில் விளையாட மாட்டார் என்ற நிலையில், நேற்றுக் காலையில் இடம்பெற்ற பயிற்சியில் தொடைக் காயமொன்றுக்கு ஸ்டோக்ஸ் உள்ளாகியுள்ளார்.
அந்தவகையில், தற்போது மன்செஸ்டர் சிற்றியில் உடற்றகுதியுடன் காணப்படும் மத்தியபின்களவீரராக நிக்கலஸ் ஒட்டமென்டி மாத்திரம் காணப்படுகையில், மத்தியகளவீரர் பெர்ணான்டின்ஹோ, வலது பின்களவீரர் கைல் வோக்கர் அல்லது இளம்பின்களவீரர்களான எரிக் கர்சியா, டெய்லர் ஹர்வூட்-பெலிஸை பயன்படுத்த வேண்டிய நிலையில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது.
21 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
1 hours ago