Shanmugan Murugavel / 2016 ஜூன் 20 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்மியூலா 1 (F1) போட்டிகளில் இவ்வாண்டு தான் சந்தித்துவரும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக, இவ்வாண்டுப் பட்டத்தை தான் வெல்வது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக, லூயிஸ் ஹமில்டன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் கிரான்ட் பிறிக்ஸ் தொடரில் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் வீரரான நிக்கோ றொஸ்பேர்க் முதலிடம் பெற்றதோடு, உலகச் சம்பியனான ஹமில்டன், ஐந்தாவது இடத்தையே பெற்றுக் கொண்டார்.
இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த ஹமில்டன், 'இவ்வாண்டு, நிக்கோவுக்கு சிறந்த ஆண்டாகத் தெரிகிறது. ஆனால், நான் எப்போதும் கைவிடுவதில்லை. எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கையாக உணரவில்லை. ஆனால், ஏராளமான ஓட்டங்கள் இன்னும் உள்ளன. கடைசி இரண்டும் சிறப்பாக அமைந்தன" என்றார்.
காரின் இயந்திரத்தின் அமைப்புகளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இப்போட்டியிலும் தடுமாறியிருந்ததோடு, இந்தப் போட்டியின் முடிவில், நிக்கோ றொஸ்பேர்க்குக்கும் ஹமில்டனுக்குமிடையிலான புள்ளிகளின் வித்தியாசம், 24ஆக மாறியுள்ளது. 'எனக்குச் சில புள்ளிகள் கிடைத்தன என நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போதிலிருந்து, சிறப்பான ஓட்டங்கள் கிடைக்குமென நான் நம்புகிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.
45 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago