2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

LPL போட்டிகள் ; தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமம் அதிரடியாக ரத்து

Freelancer   / 2024 மே 22 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

LPL போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்வதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது.

LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக LPL ஏற்பாட்டு குழுவின் தலைவர் அனில் மொஹான் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .