2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

AB அதிரடி; பெங்களூரு அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 மே 05 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி நான்கு விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் சன்ரைசெஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் டேவிட் வோர்னர் 49 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 61 ஓட்டங்களையும், சிகார் தவான் 37 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்சேல் ஸ்டார்க், வருண் ஆரோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்த போதும் AB DE வில்லியர்சின் சிறந்த அதிரடி துடுப்பாட்டம் அவர்களுக்கு 4 விக்கெட்களினால் வெற்றியைப் கொடுத்தது. AB DE வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள், 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். கிறிஸ் கெயில் 19 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் கர்ன் ஷர்மா 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

போட்டியின் நாயகனாக AB DE வில்லியர்ஸ் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி பெற்றுள்ளது. ஹைதராபாத் சன்ரைசெஸ் அணி 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X