Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 02, வியாழக்கிழமை
Editorial / 2023 மே 29 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று (28) மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று (29) நடைபெறுகிறது.
‘இன்று மேட்ச் இருக்கா? இல்லையா’ என்ற ஏக்கத்தில் நேரலையில் போட்டியைக் காண காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் எஞ்சியது.
அதனால், இன்று (29) காலை முதலே அகமதாபாத்தின் வானிலை சூழலை அறிந்துகொள்ள ஆர்வம் கட்டப்பட்டு வருகிறது. ‘மழை இருக்காதுல்ல’ என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்த நிலையில், அகமதாபாத் நகரில் மதியம் 2.42 மணி நேர நிலவரப்படி நாள் முழுவதும் வானிலை சாதகமாக இருக்கும் என்றே களத்தில் இருந்து வரும் தகவல் உறுதி செய்கின்றன. 36° செல்சியஸ் வெப்பம் நிலவுவதாகவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் தகவல். இடியுடன் கூடிய மழை பொழிவுக்கான வாய்ப்பு 6% என சொல்லப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்றைக்கான வானிலை முன்னறிவிப்பாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
01 May 2024
01 May 2024