2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அடுத்த மாதம் 11ஆம் திகதி ஐ.பி.எல் ஏலம்?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 07 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டு ஏலமானது அடுத மாதம் 11ஆம் திகதி இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தக்கவைத்துள்ள, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை எட்டு அணிகளும் சமர்ப்பிப்பதற்கு இம்மாதம் 20ஆம் திகதியை காலக்கெடுவாக ஐ.பி.எல் நிர்ணயித்துள்ளாது.

மெய்நிகராக கடந்த திங்கட்கிழமை கூடிய ஐ.பி.எல் நிர்வாக சபையிலேயே குறித்த இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எங்கு ஏலம் இடம்பெறும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.பி.எல்லுக்கு இடம் குறித்து பல்வேறு தெரிவுகள் குறித்து ஆராய்ந்து வருகின்ற சபையானது, ஐக்கிய அரபு அமீரகத்தை தெரிவொன்றாக தக்க வைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .