Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
போலந்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவுடனான இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
நடப்பு சம்பியன்ஸ் லீக் சம்பியனான மட்ரிட் சார்பாக பெடெரிக்கோ வல்வேர்டே, கிலியான் மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில் சம்பியன்ஸ் லீக் சம்பியன்களுக்கும், யூரோப்பா லீக் சம்பியன்களுக்குமிடையிலான சுப்பர் கிண்ணத்தை அதிக தடவைகள் வென்ற அணியாக றியல் மட்ரிட் மாறியது. மட்ரிட் ஆறு தடவைகள் வென்றுள்ள நிலையில், இன்னொரு லா லிகா கழகமான பார்சிலோனா, இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் ஆகியன ஐந்து தடவைகள் வென்றிருந்தன.
20 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago