2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் றென்ஷோ

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மற் றென்ஷோ இடம்பெற்றுள்ளார். றென்ஷோ ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவுஸ்திரேலியா இறுதியாக விளையாடிய ஒருநாள் தொடரான தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றிருந்த மர்னுஸ் லபுஷைன் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இத்தொடரின் முதலாவது போட்டியை அலெக்ஸ் காரி தவறவிடவுள்ளார்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்கான குழாம் மாத்திரமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் குழாம்: மிற்செல் மாஷ் (அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், ஜொஷ் ஹேசில்வூட், நாதன் எலிஸ், ஸ்கேவியர் பார்ட்லெட், அடம் ஸாம்பா, பென் டுவார்ஷுஸ், மத்தியூ றென்ஷோ, அலெக்ஸ் காரி, கமரன் கிறீன், மிற்செல் ஸ்டார்க், கூப்பர் கொனோலி.

இருபதுக்கு – 20 குழாம்: மிற்செல் மாஷ் (அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், ஜொஷ் ஹேசில்வூட், நாதன் எலிஸ், ஸ்கேவியர் பார்ட்லெட், அடம் ஸாம்பா, பென் டுவார்ஷுஸ், டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மத்தியூ கூனுமென், ஷோன் அபொட்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .