2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய மக்ஸ் சவாலில் வென்றார் எஷான் பீரிஸ்

Editorial   / 2019 ஜூன் 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் சேபாங் சர்வதேச கார்ட்டிங் வளாகத்தில் அண்மையில் 2019 நடைபெற்ற ஆசிய மக்ஸ் சவாலில், டி.டி2 சிரேஷ்ட பிரிவில் எஷான் பீரிஸ் வென்றார்.

இப்போட்டியின் தகுதிகாண் சுற்றில் ஐந்தாவது இடம் என்ற பலமான நிலையில் எஷான் பீரிஸ் ஆரம்பித்ததுடன், முதலாவது தெரிவுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.  இரண்டாவது தெரிவுப்போட்டியிம் ஆரம்பத்தில் விபத்தொன்றை தவிர்க்க முடியாமல் போனதால் அப்போட்டியில் ஓய்வுபெறவேண்டியேற்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னரான போட்டியில் 10ஆவது இடத்திலிருந்து ஆரம்பித்து அசாத்திய ஓட்டும் திறமையால் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது இடத்தைப் பெற்று அச்சுற்றை முடித்துக்கொண்டார். இறுதிப் போட்டியில் டி.ஆர்.எம் மோட்டார்ஸ்போர்ட்ஸின் அமெர் ஹரீஸை சில சுற்றுக்களால் முந்திச்சென்று தனது வெற்றியை உறுதிப்படுத்தினார்.

போர்மியுலா 3 போட்டிகளில் எஷான் பீரிஸ் கவனஞ் செலுத்தியுள்ளபோதும் தொடர்ந்தும் அவரை பலமாக வைத்திருப்பதற்காக அவருடைய முகாமையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் கார்ட்டிங் போட்டிகளில் தொடருமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

மூன்று மாத இடைவெளியின் பின்னர் கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது அடுத்த வாரம் ஜப்பானின் சுசுகாவில் ஆரம்பமாக போர்முலா 3 போட்டிக்கு எஷான் பீரிஸின் நம்பிக்கைய அதிகரித்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இவ்வாண்டு இதற்கு முன்னர் நடைபெற்ற றோட்டக்ஸ் மக்ஸ் ஆசிய முதலாவது சுற்றுப் போட்டியின் இதேபிரிவில் எஷான் பீரிஸ் வெற்றிபெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .