2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிந்து

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் ஜகார்த்த்தா, பலெம்பாங்கில் இடம்பெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பி.வி சிந்து தகுதிபெற்றுள்ளார்.

இன்று இடம்பெற்ற தனது அரையிறுதிப் போட்டியில், 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகனே யமகுச்சியை வென்றே இறுதிப் போட்டிக்கு பி.வி சிந்து தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றைய அரையிறுதிப் போட்டியில், தாய்வானின் தாய் ஸு-யிங்கிடம் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்த இந்தியாவின் சாய்னா நெஹ்வால் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று மாலை இடம்பெற்ற தடகளப் போட்டிகளில் இந்தியாவின் ஹிமா தாஸ், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் முஹமட் அனாஸ், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் டுட்டே சந்த், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .