Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பில் சிமொன்ஸ் ஆகியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான லால்சன்ட் ராஜ்பூட்டையே பில் சிமொன்ஸ் பிரதியீடு செய்கிறார்.
லால்சன்ட் ராஜ்பூட் நியமிக்கப்பட்டு மூன்று மாதத்திலேயே அவருடைய ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ள பில் சிமொன்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் அடுத மாதம் இடம்பெறவுள்ள சிம்பாப்வேக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடருக்காக டுபாயில் தயாராகும் ஆப்கானிஸ்தான் குழாமுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை பில் சிமொன்ஸின் ஒப்பந்தம் காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, பயிற்சியாளருக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நேர் காணல்களை நடத்தியிருந்த நிலையில், தெரிவுசெய்யபட்டு நேர்காணப்பட்ட மூவரில் பில் சிமொன்ஸ் ஒருவராவார். இந்நிலையில், அயர்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அனுபவத்தையும் சிறந்த பெறுபேற்றையும் கொண்டிருந்ததோடு, ஆப்கானிஸ்தானின் ஆலோசனையாளராக கடந்தாண்டு பணியாற்றிய நிலையிலேயே பில் சிமொன்ஸ் பயிற்சியாளராகத் தெரிவாகியிருந்தார்.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைத் தொடர்ந்து, இவ்வாண்டு மார்ச்சியில் உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பங்கேற்பதுடன், பின்னர் தமது முதலாவது டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.
பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் பதவிக்காகவும், கடந்த மாதம் ஆரம்பத்தில் பில் சிமொன்ஸ் நேர் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
51 minute ago