2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆரம்பப் போட்டியை வெல்லத் தவறியது பிரேஸில்

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்படும் பிரேஸில் தமது ஆரம்பப் போட்டியை வெல்லத் தவறியுள்ளது. அந்தவகையில், நேற்றிரவு இடம்பெற்ற சுவிற்ஸர்லாந்துடனான குழு ஈ போட்டியை சமநிலையில் பிரேஸில் முடித்துக் கொண்டது.

குறித்த போட்டியின் 20ஆவது நிமிடத்தில் பிலிப் கூச்சினியோ பெற்ற கோலின் மூலம் பிரேஸில் முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும் போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஸ்டீவன் சுபர் பெற்ற கோல் காரணமாக 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற மெக்ஸிக்கோவுடனான குழு எவ் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஜேர்மனி தோல்வியடைந்திருந்தது. மெக்ஸிக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹிர்விங் லொஸானோ பெற்றிருந்தார்.

இந்நிலையில், குறித்த போட்டியின் 35ஆவது நிமிடத்திலேயே ஹிர்விங் லொஸானோ கோலைப் பெற்றிருந்த நிலையில், மெக்ஸிக்கோவின் தலைநகரமான மெக்ஸிக்கோ நகரத்தில் குறித்த போட்டியின் 35ஆவது நிமிடத்தையடுத்த ஏழு செக்கன்களில் இரசிகர்கள் இரண்டு இடங்களில் துள்ளிக் குதித்ததில், செயற்கையான நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

அந்தவகையில், வரலாற்றில் முதற் தடவையாக, பிரேஸில், ஜேர்மனி, ஆர்ஜென்டீன அணிகள், உலகக் கிண்ண ஆரம்பப் போட்டிகளில் வெற்றிபெறத் தவறியுள்ளன.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற கொஸ்டா றிக்காவோடுடனான குழு ஈ போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சேர்பியா வென்றிருந்தது. சேர்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் கொலரோவ் பிறீ கிக் மூலம் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .