Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், மெல்பேணில் நேற்று ஆரம்பித்த நான்காவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இன்றைய இரண்டாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்கள் என்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 327 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர் 103, அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 76, ஷோர்ன் மார்ஷ் 61, கமரோன் பன்குரோப்ட் 26, டிம் பெய்ன் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட் 4, ஜேம்ஸ் அன்டர்சன் 3, கிறிஸ் வோக்ஸ் 2, டொம் குரான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், அலிஸ்டயர் குக் 104, ஜோ றூட் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். பந்துவீச்சில், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
9 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago