Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ ரூட் மூன்றாமிலக்கவீரராக மீண்டும் களமிறங்குவது கருத்திற் கொள்ளப்படும் என்றவாறான கருத்துகளை இங்கிலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
அணியின் சிறத வீரரே மூன்றாமிலக்கவீரராகக் களமிறங்க வேண்டுமென நீண்டகாலமாக நினைக்கின்ற பெய்லிஸ், றூட் நான்காமிடத்தில் துடுப்பெடுத்தாட விரும்புகின்றபோதும், றூட்டின் சிறந்த நிலை மூன்றாமிடமென உறுதிப்படுத்தியுள்ளார்.
மூன்றாமிடத்தில் றூட் முன்னர் துடுப்பெடுத்தாடியிருந்தபோதும், கடந்தாண்டில் இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டின் நடுவிலிருந்து அது கைவிடப்பட்டு அதிலிருந்து நான்காமிடத்திலேயே அவர் துடுப்பெடுத்தாடியிருந்தார்.
எவ்வாறெனினும் இங்கிலாந்தின் தொடர்ச்சியான துடுப்பாட்டப் பிரச்சினைகள் அயர்லாந்துக்கெதிரான டெஸ்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யார் எந்த இடத்தில் துடுப்பெடுத்தாடுவதென்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்நிலையிலேயே, மூன்றாமிடத்தில் சிரேஷ்ட வீரரொருவரைத் துடுப்பெடுத்தாட வைப்பதை இங்கிலாந்து கருத்திற் கொள்ளும் என பெய்லிஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முதலாவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாமின்படி அந்த வீரர் றூட் அல்லது பென் ஸ்டோக்ஸாகவே அமைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், றூட்டே அணித்தலைவர் எனத் தெரிவித்த பெய்லிஸ், அவர் மீண்டும் நான்காமிடத்துக்கு துடுப்பெடுத்தாடச் சென்றது போல அவரே இறுதித் தீர்மானத்தை எடுப்பார் எனக் கூறியதுடன், தான் என்ன உணருகின்றேன் என அவருக்குத் தெரியும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், 14 பேர் கொண்ட முதலாவது ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளநிலையில், டெஸ்ட் குழாமில் முதற்தடவையாக ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளார். தவிர, இங்கிலாந்தின் உப தலைவராக பென் ஸ்டோக்ஸ் மீள நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொவ்ரா ஆர்ச்சர், ஜொனி பயார்ஸ்டோ, ஸ்டூவர்ட் ப்ரோட், றோறி பேர்ண்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோ டென்லி, ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் ஆஷஸ் தொடருக்கான 17 பேர் கொண்ட குழாமானது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டநிலையில் அதில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கமரோன் பான்குரொப்ட், விக்கெட் காப்பாளர் மத்தியூட் வேட், சகலதுறைவீரர்கள் மிற்செல் மார்ஷ், மர்னுஸ் லபுஷைன், வேகப்பந்துவீச்சாளர் பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், மைக்கல் நேஸர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
குழாம்: டேவிட் வோணர், மார்க்கஸ் ஹரிஸ், கமரொன் பான்குரொஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ரெவிஸ் ஹெட், மத்தியூ வேட், மர்னுஸ் லபுஷைன், டிம் பெய்ன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), மிற்செல் மார்ஷ், ஜேம்ஸ் பற்றின்சன், மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், மைக்கல் நேஸர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago