Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
நாணயச் சுழற்சியின்போது இரண்டு அணித்தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், அர்ஷ்டீப் சிங்கை அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ் பிரதியிட்டிருந்தனர்.
பாகிஸ்தான் அணி: சஹிப்ஸடா பர்ஹான், சைம் அயூப், சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), பாபர் அஸாம், ஷடாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் நவாஸ், பஹீம் அஷ்ரஃப், ஷகீன் ஷா அஃப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அஹ்மட்
இந்திய அணி: இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (அணித்தலைவர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் டுபே, ரிங்கு சிங், அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா.
12 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago