2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார்.

எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

தவிர, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்படும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் புரோட், அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான  மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் குழாமிலும் இடம்பெறாததால், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவரின் எதிர்காலம் தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.   

ஒருநாள் சர்வதேச குழாம்-ஒயின் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீட், ஜோ ரூட், ஜேஸன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்

இருபதுக்கு-20 குழாம்-ஒயின் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீட், ஜோ ரூட், ஜேஸன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .