Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபுதாபியில் ஆரம்பமான பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் முதற் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஒயின் மோர்கன் 76, ஜேம்ஸ் டெய்லர் 60, கிறிஸ் வோக்ஸ் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் இர்பான் 3 விக்க்கெட்டுக்களையும் ஷோய்ப் மலிக், அன்வர் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் யசிர் ஷா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 217 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 43.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், மொஹமட் ஹபீஸ், பாபர் அஸாம் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 102, 62 ஓட்டங்களைப் பெற்றனர்.
இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில், ரீஸ் டொப்லி 3 விக்கெட்டுக்களையும் மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago