2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இங்கிலாந்திடமிருந்து ஆஷஸை மீளக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், முதலாவது, இரண்டாவது போட்டிகளில் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட்டை இன்றைய ஐந்தாம் நாளில் வென்று, இங்கிலாந்தில் வைத்து 2015ஆம் ஆண்டு இழந்த ஆஷஸை, மீதம் இரண்டு டெஸ்ட்கள் இருக்கும் நிலையிலேயே கைப்பற்றிக் கொண்டது.

மழை பெய்தமை காரணமாக, ஆடுகளம் ஈரமாகக் காணப்பட்டதனால், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் மதிய நேர உணவு நேர இடைவேளைக்குப் பின்னரே ஆரம்பித்த நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்பட்ட இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில்,  ஜேம்ஸ் வின்ஸ் 55, டேவிட் மலன் 54 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில்,  ஜொஷ் ஹேசில்வூட் 5, பற் கமின்ஸ், நேதன் லையன் ஆகியோர் தலா 2, மிற்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, அவுஸ்திரேலிய அணியின் இனிங்ஸில் 239 ஓட்டங்களைப் பெற்ற அவ்வணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவானார்.

ஸ்கோர் விபரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 403/10 (துடுப்பாட்டம்: டேவிட் மலன் 140, ஜொனி பெயார்ஸ்டோ 119, மார்க் ஸ்டோன்மன் 56 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 4/91, ஜொஷ் ஹேசில்வூட் 3/92, பற் கமின்ஸ் 2/84)

அவுஸ்திரேலியா: 662/9 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 239, மிற்செல் மார்ஷ் 181, உஸ்மான் கவாஜா 50, டிம் பெய்ன் ஆ.இ 49, பற் கமின்ஸ் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 4/116, கிரேய்க் ஒவெர்ட்டன் 2/110)

இங்கிலாந்து: 218/10 (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் வின்ஸ் 55, டேவிட் மலன் 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 5/48, பற் கமின்ஸ் 2/53, நேதன் லயன் 2/42)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X