2025 ஜூலை 12, சனிக்கிழமை

இங்கிலாந்து எதிர் இந்தியா: 4ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகின்றது

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி செளதாம்டனில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

முதலிரண்டு டெஸ்ட்களிலும் தோல்வியைத் தளுவிய இந்தியா மூன்றாவது டெஸ்டில் அணியாக எழுச்சி பெற்று வெற்றி பெற்றிருந்தது. அந்தவகையில், 2-1 என இத்தொடரில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றபோதும் அவ்வணியின் மீதே அழுத்தம் காணப்படுகின்றது.

அதுவும் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களான அலிஸ்டயர் குக், கீட்டன் ஜெனிங்ஸ், ஜோ றூட் ஆகியோர் ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். இதிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கீட்டன் ஜெனிங்ஸ், அலிஸ்டயர் குக் இப்போட்டியில் பிரகாசிக்காத பட்சத்தில் அணியிலிருந்து நீக்கப்படும் அபாயத்தையும் கொண்டுள்ளனர்.

இது தவிர, உள்ளூர்ப் போட்டிகளில் மொயின் அலி சகலதுறையில் மிளிர்ந்துள்ள நிலையில், அவரை அணியில் உள்ளடக்குவதாக அல்லது இல்லையா என்ற சிக்கலை இங்கிலாந்து எதிர்கொள்கின்றது. அணியில் உள்ளடக்குவதனாலும் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக ஒலி போப்பை பிரதியீடு செய்வதா அல்லது பிரதான சுழற்பந்துவீச்சாளரான அடில் ரஷீட்டை பிரதியீடு செய்வதா என்ற சிக்கல் இருக்கின்றது. ஏனெனில், இருவரும் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தவில்லை.

இதேவேளை, மூன்றாவது டெஸ்டில் காயமடைந்த விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ, விக்கெட் காப்பை விட்டு முன்வரிசையில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்காத நிலையில் அவரை எவ்வாறு எந்த இடத்தில் களமிறக்குவதென்ற சிக்கல் காணப்படுகின்றது.

இதுதவிர, கிறிஸ் வோக்ஸ் உபாதை காரணமாக நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருக்காத நிலையில் சாம் கர்ரன் அவரை அணியில் பிரதியீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, விராத் கோலியின் தலைமையின் கீழ் அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட்களில் முதலாவது தடவையாக மாற்றமின்றி இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்றாவது டெஸ்டில் உபாதையைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இரவிச்சந்திரன் அஷ்வின் நேற்று முன்தினம் பந்துவீசியிருந்த நிலையில், அவரே தனித்த சுழற்பந்துவீச்சாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மூன்று டெஸ்ட்களின் மைதானங்களும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகவே காணப்பட்டிருந்த நிலையில், இந்த டெஸ்டுக்கான ஆடுகளமும் பச்சையாகவே தற்போது காணப்படுகின்றபோதும் முதல் மூன்று டெஸ்ட்களையும் விட துடுப்பாட்டத்துகு ஒத்துழைக்கும் எனக் கருதப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .