Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கான புதிய உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியொன்றுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபை விளம்பரப்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிலாந்தின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான போல் கொலிங்வூட்டே காணப்படுகின்றார். அறிவுரை வழங்கும் அடிப்படையிலேயே போல் கொலிங்வூட் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதுடன், ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்டுடன் போல் கொலிங்வூட்டின் ஒப்பந்தம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்தின் உதவிப் பயிற்றுவிப்பாளராக தொடர போல் கொலிங்வூட் விரும்பினால், உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போல் கொலிங்வூட் விண்ணபிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தலைமைப் பயிற்சியாளரொருவர், பணிச்சுமையை பகர்வதற்கு சமமான சிரேஷ்ட தன்மையைக் கொண்ட மூன்று உதவிப் பயிற்றுவிப்பாளர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து பயிற்சிக் குழாமொன்றுக்கான தனது நோக்கத்தை இங்கிலாந்து கிரிக்கெட்டின் பணிப்பாளர் அஷ்லி கைல்ஸ் வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த மூன்று உதவிப் பயிற்சியாளர்களும், வேறு கிரிக்கெட் போட்டிகளை தலைமைப் பயிற்றுவிப்பாளர் பார்வையிடுவதற்காக, விடுப்பொன்றை எடுப்பதற்காக அல்லது வேறு விடயங்களில் பங்கேற்பதற்காக அணியைப் பொறுப்பேற்பார்கள் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போல் கொலிங்வூட் விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகையில், குறித்த பதவிக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டவர்களாக அவர் காணப்படுகின்றார்.
இதேவேளை, அடுத்த இரண்டு உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவிகளும் பூர்த்தியாக்கப்பட்டு காணப்படுகின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முன்னணி துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் தோர்ப் ஒருவர் என்பதுடன், மற்றையவர் இங்கிலாந்தின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் ஆவார்.
இந்நிலையில், எதிர்வரும் வாரங்களில் இங்கிலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி வெற்றிடமாகும்போது அப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விருப்பத்தை கிரஹாம் தோர்ப்பும், கிறிஸ் சில்வர்வூட்டும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
52 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago
1 hours ago