Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 08 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு, நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.
தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில், தமது அணித்தலைவர் வின்சென்ட் கொம்பனி பெற்ற அபாரமான கோலாயே, இங்கிலாந்து பீறிமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.
இப்போட்டி முடிவடைய 20 நிமிடங்கள் இருக்கும் வரையில் கோலெதுவும் பெறப்பட்டிருக்காத நிலையில், முன்னேறி வந்த பின்களவீரரான வின்சென்ட் கொம்பனி, கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து கோ கம்பத்தின் மூலைக்குள் பந்தைச் செலுத்தியதன் மூலம் பெறப்பட்ட கோலின் மூலமே இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது.
அந்தவகையில், குறித்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் லிவர்பூலை முந்தி 95 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியிருந்தது.
மன்செஸ்டர் சிற்றியை விட ஒரு புள்ளி குறைவாக 94 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்ற நிலையில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அவ்வணியுடனான போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வென்றால், தமது மைதானத்தில் நடைபெறவுள்ள வொல்வர்ம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் எந்த முடிவை லிவர்பூல் பெற்றாலும் இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி தக்க வைக்கும்.
மாறாக, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டால், தோல்வியடைந்தால் வொல்வர்ஹம்ப்டன் வொன்டரர்ஸுடனான போட்டியில் லிவர்பூல் வெல்லாவிட்டால் மன்செஸ்டர் சிற்றி சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
56 minute ago
2 hours ago