Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக் குழாமில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்கள வீரரான கலும் ஹட்சன் ஒடோய் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியொன்றை இன்னும் ஆரம்பித்திருக்காத கலும் ஹட்சன் ஓடோய், செக் குடியரசு, மொன்டனீக்ரோவுக்கெதிரான யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இங்கிலாந்துக் குழாமிலேயே இடம்பெற்றுள்ளார்.
நடப்பு பருவகாலத்தில், செல்சிக்காக 19 போட்டிகளில் விளையாடியுள்ள 18 வயதான கலும் ஹட்சன் ஒடோய், ஐந்து கோல்களைப் பெற்றுள்ளார். இதில், 11 போட்டிகளில் மாற்றுவீரராகக் களமிறங்கிய கலும் ஹட்சன் ஓடோய், ஆரம்பித்த அனைத்துப் போட்டிகளும் கிண்ணப் போட்டிகளாகும்.
இங்கிலாந்தின் 21 வயதுக்குட்பட்டோருக்கான குழாமில் முதற்தடவையாக கடந்த வாரமே இடம்பெற்றிருந்த கலும் ஹட்சன் ஒடோய், அங்கிருந்தே தற்போது இங்கிலாந்தின் சிரேஷ்ட குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜோன் ஸ்டோன்ஸ், ஃபபியான் டெல்ப், ருபென் லொஃப்டஸ்-சீக் ஆகியோருடன் இணைந்து லுக் ஷோவும் குழாமிலிருந்து வெளியேறியநிலையிலேயே கலும் ஹட்சன் ஒடோய் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக் குழாம்: ஜக் புட்லான்ட், டொம் கீட்டன், ஜோர்டான் பிக்ஃபோர்ட், ட்ரெண்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட், பென் சில்வெல், மைக்கல் கீன், ஹரி மக்கியூரி, டனி றோஸ், ஜேம்ஸ் டரோக்வ்ஸ்கி, கெய்ரான் ட்ரிப்பியர், கைல் வோக்கர், றொஸ் பார்க்லி, டெலே அல்லி, எரிக் டயர், ஜோர்டான் ஹென்டர்சன், டெக்லன் றைஸ், ஜேம்ஸ் வோர்ட்-ப்ரோஸ், கலும் ஹட்சன் ஒடோய், ஹரி கேன், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், ஜடோன் சஞ்சோ, ரஹீம் ஸ்டேர்லிங், கலும் வில்சன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
55 minute ago
2 hours ago