2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்டை வென்றது இந்தியா

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நொட்டிங்ஹாமில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டில் இன்றைய ஐந்தாம் நாளில் இந்தியா வென்றது.

521 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய ஐந்தாம் நாளை ஆரம்பித்து 17 பந்துகளையே எதிர்கொண்டு மேலும் ஆறு ஓட்டங்களைச் சேர்ப்பதற்குள் இறுதி விக்கெட்டையும் பறிகொடுத்து, 317 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து அணி சார்பாக ஜொஸ் பட்லர் 106, பென் ஸ்டோக்ஸ் 62, அடில் ரஷீட் ஆட்டமிழக்காமல் 33, ஸ்டூவர்ட் ப்ரோட் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா 5, இஷாந்த் ஷர்மா 2, இரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்டிக் பாண்டியா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக விராத் கோலி தெரிவானார்.

ஸ்கோர் விவரம்

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 329/10 (துடுப்பாட்டம்: விராத் கோலி 97, அஜின்கியா ரஹானே 81, ஷீகர் தவான் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/64, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/72, கிறிஸ் வோக்ஸ் 3/75)

இங்கிலாந்து: 161/10 (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 39, அலிஸ்டயர் குக் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்டிக் பாண்டியா 5/28, இஷாந்த் ஷர்மா 2/32, ஜஸ்பிரிட் பும்ரா 2/37)

இந்தியா: 352/7 (துடுப்பாட்டம்: விராத் கோலி 103, செட்டேஸ்வர் புஜாரா 72, ஹர்டிக் பாண்டியா ஆ.இ 52, ஷீகர் தவான் 44, லோகேஷ் ராகுல் 36, அஜின்கியா ரஹானே 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/101, பென் ஸ்டோக்ஸ் 2/68)

இங்கிலாந்து: 317/10 (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 106, பென் ஸ்டோக்ஸ் 62, அடில் ரஷீட் ஆ.இ 33, ஸ்டூவர்ட் ப்ரோட் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 5/85, இஷாந்த் ஷர்மா 2/70)

போட்டியின் நாயகன்: விராத் கோலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .