Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸில் வெற்றி பெற்ற மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் வெற்றி பெற்றார். இப்பந்தயத்தில் பெற்ற வெற்றி மூலம், தனக்கும், மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாகக் குறைத்துக் கொண்டார்.
இதுவரையில், இந்த வருடத்தில், ஆறு பந்தயங்களில் வென்றுள்ள ஹமில்டன் 250 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இருக்கின்ற நிலையில், ஏழு பந்தயங்களில் வென்றுள்ள றொஸ்பேர்க், 248 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டானியல் றிக்கார்டோ, 161 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.
சிறப்பான திறமையை வெளிப்படுத்திய ஹமில்டன், மேற்படி பந்தயத்தை முதலாவதாக ஆரம்பிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். எனினும் பந்தய ஆரம்பிப்பதற்கு கண நேரம் முன்பாக தோன்றிய புகையால், மோசமான ஆரம்பத்தைப் பெற்ற ஹமில்டன், முதலாவது திருப்பத்தின் முடிவிலேயே ஆறாவது இடத்துக்குச் சென்றிருந்தார். எனினும், பின்னர் போராடி இரண்டாமிடத்துக்கு வந்த போதும், றொஸ்பேர்க்குக்கு சவால் வழங்கி, வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், பெராரி அணியின் ஜேர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டல் மூன்றமிடத்தைப் பெற்றிருந்தார்.
7 minute ago
15 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
22 minute ago
28 minute ago