2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

இத்தாலிய சீரி ஏ தொடர்: கொமோவிடம் தோற்ற ஜுவென்டஸ்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற கொமோவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் தோற்றது.

இதேவேளை கைகரியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற அவ்வணிக்கும் லேஸியோவுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 50 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான நாப்போலியும், 47 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட இன்டர் ஒரு போட்டியில் அதிகமாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X