2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு எதிராக தோல்வியைத் தவிர்த்த நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 29 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்குக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தோல்வியை நியூசிலாந்து தவிர்த்துள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கான்பூரில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை ஒரு விக்கெட் இழப்புக்கு நான்கு ஓட்டங்களைப் பெற்றவாறு தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து, டொம் லேதம், வில் சோமர்வில் மூலம் நிதானமாகத் தடுத்தாடியது.

இந்நிலையில், 36 ஓட்டங்களுடன் சோமர்வில் ஆட்டமிழந்தபோதும், அடுத்து வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் தடுத்தாடிய வண்ணம் இருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் இரவீந்திர ஜடேஜாவிடம் லேதம் வீழ்ந்த நிலையில், அடுத்து வந்த றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் உடனேயே ஜடேஜா, அக்ஸர் பட்டேலிடம் வீழ்ந்திருந்தனர்.

சிறிது நேரத்தில் ஜடேஜாவிடம் 24 ஓட்டங்களுடன் வில்லியம்ஸ் வீழ்ந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தின் பொன்னர் டொம் பிளன்டலும் அஷ்வினிடம் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த கைல் ஜேமிஸன், டிம் செளதி ஆகியோரும் ஜடேஜாவிடம் வீழ்ந்தபோதும், றஷின் றவீந்திராவும், அஜாஸ் பட்டேலும் களத்தில் நிலைத்து நின்று நியூசிலாந்தின் தோல்வியைத் தவிர்த்திருந்தனர். இன்றைய ஐந்தாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 345/10 (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் 52, இரவீந்திர ஜடேஜா 50, இரவிச்சந்திரன் அஷ்வின் 38, அஜின்கியா ரஹானே 35, செட்டேஸ்வர் புஜாரா 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 5/69, கைல் ஜேமிஸன் 3/91, அஜாஸ் பட்டேல் 2/90)

நியூசிலாந்து: 296/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 95, வில் யங்க் 89 ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 5/62, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/82, உமேஷ் யாதவ் 1/50, இரவீந்திர ஜடேஜா 1/57)

இந்தியா: 234/7 (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 65, ரித்திமான் சஹா ஆ.இ 61, இரவிச்சந்திரன் அஷ்வின் 32, அக்ஸர் பட்டேல் ஆ.இ 28, செட்டேஸ்வர் புஜாரா 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 3/40, டிம் செளதி 3/75, அஜாஸ் பட்டேல் 1/60)

நியூசிலாந்து: 165/9 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 52, வில் சோமர்வில் 36, கேன் வில்லியம்ஸன் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/40, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/35, அக்ஸர் பட்டேல் 1/23, உமேஷ் யாதவ் 1/34)

போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .