2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 26 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, குவஹாத்தியில் சனிக்கிழமை (22) ஆரம்பித்து புதன்கிழமை (26) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா: 489/10 (துடுப்பாட்டம்: செனுரன் முத்துசாமி 109, மார்கோ ஜன்சன் 93, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 49, கைல் வெரைன் 45, தெம்பா பவுமா 41, ஏய்டன் மார்க்ரம் 38, றயான் றிக்கெல்டன் 35, டொனி டி ஸொர்ஸி 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 4/115, ஜஸ்பிரிட் பும்ரா 2/75, இரவீந்திர ஜடேஜா 2/94, மொஹமட் சிராஜ் 2/106)

இந்தியா: 201/10 (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 58, வொஷிங்டன் சுந்தர் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 6/48, சைமன் ஹாமர் 3/64, கேஷவ் மஹராஜ் 1/39)

தென்னாபிரிக்கா: 260/5 (துடுப்பாட்டம்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 94, டொனி டி ஸொர்ஸி 49, வியான் முல்டர் ஆ.இ 35, றயான் றிக்கெல்டன் 35, ஏய்டன் மார்க்ரம் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/62, வொஷிங்டன் சுந்தர் 1/67)

இந்தியா: 140/10 (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: சைமன் ஹாமர் 6/37, கேஷவ் மஹராஜ் 2/37, செனுரன் முத்துசாமி 1/21, மார்கோ ஜன்சன் 1/23)

போட்டியின் நாயகன்: மார்கோ ஜன்சன்

தொடரின் நாயகன்: சைமன் ஹாமர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X