Editorial / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் பூசப்பட்டுள்ளதாக இலங்கை வீரர் பானுகா ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026 T20 உலக கிண்ண தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி, மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இலங்கை தனது முதல் போட்டியில், கொழும்பில் அயர்லாந்தை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் குறித்து பானுகா ராஜபக்ஷ வைத்துள்ள குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய அவர், "இந்திய வீரர்களிடம் உள்ள மட்டை, நாம் வாங்கும் சிறந்த மட்டைகளை விட மிகவும் உயர்ந்தது. அதில் ரப்பர் அடுக்கு பூசப்பட்டிருப்பது போல் உணர்கிறேன்.
அது எப்படி சாத்தியம் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இந்த மட்டைகளை மற்றவர்களால் கூட வாங்க முடியாது. இது எல்லா வீரர்களுக்கும் தெரியும்," என தெரிவித்துள்ளார்.
ஐசிசி விதிப்படி அனைத்து வீரர்கள் பயன்படுத்தும் பேட்களும் மரத்தினால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். வேறு எந்த பொருட்களுக்கு கூடுதலாக இணைக்கப்பட கூடாது.
சர்வதேச போட்டிகளில் வீரர்களின் பேட் உள்ளிட்டவை முறையாக சோதனை செய்யப்படும்.
முன்னதாக 2023 உலக கிண்ணத்தின் போது, இந்தியா வீரர் முகமது ஷமி நன்றாக ஸ்விங் ஆகக்கூடிய பந்தை பயன்படுத்துவதாக பாகிஸ்தான் வீரர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தனர்.
பானுகா ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு குறித்து ஐசிசியிடம் முறையான புகார் அளிக்கப்படவில்லை. மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து இந்தியா தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago