2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவின் சோப்ரா, பாகிஸ்தானின் நதீமுக்கு பதக்கமில்லை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தடகள சம்பியன்ஷிப்பின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெறுங்கையுடன் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும், பாகிஸ்தானின் அர்ஷாட் நதீமும் திரும்பினர்.

மழையிரவில் ட்ரினிடாட் அன்ட் டொபாகோவின் கெஷோர்ன் வொல்கொட் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான நதீமும், உலக சம்பியனான சோப்ராவும் 85 மீற்றர்களைத் தாண்டியிருக்கவில்லை.

வொல்கொட் 88.16 மீற்றர் எறிந்து முதலாவது தனது உலகப் பட்டத்தைப் பெற்ற நிலையில், கிரெனடாவின் அன்டர்சன் பீற்றர்ஸ் 87.38 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், 86.67 மீற்றர் தூரம் எறிந்து ஐக்கிய அமெரிக்காவின் கேர்டிஸ் தொம்ஸன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

இதேவேளை ஜேர்மனியின் ஜூலியன் வெபரும் 86.11 மீற்றர் தூரம் எறிந்து ஐந்தாமிடத்தைப் பெற்ற நிலையில் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 மீற்றர் தூரம் எறிந்து நான்காமிடத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் தடகள சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது இலங்கையராக மாறிய ருமெஷ் பத்திரகே ஏழாமிடத்தைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X