Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்டப் பயிற்சியாளர், பந்துவீச்சுப் பயிற்சியாளர், களத்தடுப்புப் பயிற்சியாளர், பெளதிகவியல் நிபுணர் உடற்கூற்று நிபுணர், நிர்வாக முகாமையாளருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது நேற்று முன்தினம் விளம்பரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணமே இந்தியாவின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் குழாமான தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி ஷாஸ்திரி, உதவிப் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பங்கர், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஶ்ரீதருக்கான அவர்களின் இறுதித் தொடராக அமையவுள்ளது.
உண்மையாக, உலகக் கிண்ணமே பயிற்றுவிப்பாளர் குழாமின் இறுதித் தொடர் என்றபோதும், மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்துக்கும் அவர்கள் இருக்கும் பொருட்டு அவர்களின் பதவிக்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நீடித்திருந்தது.
இந்நிலையில், பயிற்றுவிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 30ஆம் திகதி மாலை ஐந்து மணி என்றநிலையில், தற்போதைய பயிற்றுவிப்பாளர் குழாமின் அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்படும் நடவடிக்கைக்கு நேரடியாகச் செல்வார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறியுள்ளது.
எவ்வாறெனினும், தங்களது பதவிகளுக்கு ரவி ஷாஸ்திரி, சஞ்சய் பங்கர், பாரத் அருண், ஆர். ஶ்ரீதர், முகாமையாளர் சுனில் சுப்ரமணியக் ஆகியோர் தங்களது பதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பிப்பார்களா என்பது தெளிவில்லாமலுள்ளது.
பெளதிக நிபுணர் பற்றிக் ஃபர்ஹாட், உடற்கூற்று நிபுணர் ஷங்கர் பாசு ஆகியோர் தங்களது ஒப்பந்தங்களை மீளப் புதுப்பிக்க தீர்மானிக்காமல், உலகக் கிண்ணத்துடன் இந்திய அணியிலிருந்து விலகியுள்ளனர்.
தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணபிப்பவர் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டுமென்பதுடன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மூன்றாவது கட்ட தகுதியைக் கொண்டிருப்போரையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வேண்டுகிறது. அந்தவகையில் அவர் குறைந்தது 30 டெஸ்ட்கள் அல்லது 50 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago