2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வோர்னர் இல்லை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்டவீரரான டேவிட் வோணர், அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முடிவடைந்த பயிற்சிப் போட்டியில் வில் புகொவ்ஸ்கியின் முகக்கவசத்தில் கார்த்திக் தியாகி வீசிய பந்து பட்டு அவர் அதிர்ச்சிக்குள்ளாகியதுடன், மற்றைய ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜோ பேர்ண்ஸ் ஓட்டங்களைப் பெறத் தடுமாறுகின்ற நிலையில் சிக்கலை அவுஸ்திரேலியா எதிர்கொள்கின்றது.

அந்தவகையில், உஸ்மான் கவாஜா அல்லது ஷோன் மார்ஷ் மற்றும் மார்க்கஸ் ஹரிஸ் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வோர்னர் தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X