2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இன்டர் மிலனில் இணைந்தார் கொடின்

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனில் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில், உருகுவே தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவரும் பின்களவீரருமான டியகோ கொடின் இணைந்துள்ளார்.

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் அணித்தலைவராகவிருந்த 33 வயதான டியகோ கொடின், அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான தனது ஒப்பந்தமானது கடந்த பருவகாலத்துடன் முடிவடைகையில் அத்லெட்டிகோ மட்ரிட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான வில்லாறியலிடமிருந்து 2010ஆம் ஆண்டு அத்லெட்டிகோ மட்ரிட்டில் இணைந்திருந்த டியகோ கொடின், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்காக 389 போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், 2014ஆம் ஆண்டு அத்லெட்டிகோ மட்ரிட், லா லிகா பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு, கோப்பா டெல் ரே தொடரில் சம்பியனாவதற்கு, இரண்டு தடவைகல் யுரோப்பா லீக்கில் சம்பியனாவதற்கு உதவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .