Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
முதலாவது போட்டியில் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து பீனிக்ஸ் பறவை போல தமது முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தால், சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன், வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸின் பங்களிப்புகளுடன் வென்ற அவுஸ்திரேலியா இப்போட்டியில் உத்வேகத்துடன் நிச்சயமாகக் களமிறங்கும்.
மறுபக்கமாக, முதலாவது போட்டியில் தோற்றதோடு, தமது சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனை இழந்தபோதும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் அறிமுகத்தை மய்யமாக வைத்து இப்போட்டியில் களமிறங்கப் போகின்றது.
லோர்ட்ஸ் ஆடுகளமானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகவே காணப்படும் என்ற நிலையில் ஜேம்ஸ் அன்டர்சன் இல்லாதபோதும் ஸ்டூவர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ், ஜொவ்ரா ஆர்ச்சர் கூட்டணி அச்சுறுத்தலாகவே விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது பிரதான இலக்காக ஸ்டீவ் ஸ்மித்தை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்துவதாகவே நிச்சயம் காணப்படும். முதலாவது போட்டியில் பிரகாசித்திருக்காத சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலிக்குப் பதிலாக கட்டுப்பாட்டை வழங்கக்கூடிய ஜேக் லீச்சும் இவர்களுக்கு பலம் சேர்க்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக, 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் ஆஷஸை வெல்ல எதிர்பார்த்துள்ள அவுஸ்திரேலியாவானது தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் டேவிட் வோணர், கமரொன் பான்குரொப்டிடமிருந்தும், தமதணித்தலைவர் டிம் பெய்னிடமிருந்தும் நிச்சயமாக மேம்பட்ட பெறுபேற்றை எதிர்பார்க்கும். முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும் ஜேம்ஸ் பற்றின்ஸனை ஜொஷ் ஹேசில்வூட் பிரதியிடக்கூடிய வாப்புகளும் காணப்படுகின்றன.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago