2025 ஜூலை 05, சனிக்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் ஸ்மித்

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறினார்.

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் 92 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்மித் அடைந்துள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 161 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு ஓட்டங்களையே பெற்றிருந்த நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் கீழிறங்கி மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் எட்டு ஓட்டங்களையே பெற்றிருந்த அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் டேவிட் வோணர், ஏழாமிடத்திலிருந்து நான்கிடங்கள் தாழ்ந்து, 11ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இதுதவிர, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் 14 ஓட்டங்களையே பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட், ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் கீழிறங்கி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. கேன் வில்லியம்சன், 4. செட்டேஸ்வர் புஜாரா, 5. ஹென்றி நிக்கொல்ஸ், 6. ஏய்டன் மர்க்ரம், 7. குயின்டன் டி கொக், 8. திமுத் கருணாரத்ன, 9. ஜோ றூட், 10. ஃபஃப் டு பிளெஸி.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. ககிஸோ றபாடா, 3. ஜேம்ஸ் அன்டர்சன், 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவீந்திர ஜடேஜா, 6. நீல் வக்னர், 7. ட்ரெண்ட் போல்ட், 8. மொஹமட் அப்பாஸ், ஜேஸன் ஹோல்டர், 10. இரவிச்சந்திரன் அஷ்வின்

இதேவேளை சகலதுறைவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 20 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் உபதலைவர் பற் கமின்ஸ், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்கள் பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. ஷகிப் அல் ஹஸன், 3. இரவீந்திர ஜடேஜா, 4. பென் ஸ்டோக்ஸ், 5. பற் கமின்ஸ்.

(படம்: குஷான் பத்திராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .