Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில் இன்று வெற்றிபெற்ற இலங்கை அணி, அத்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, பாகிஸ்தான் அணியை வெள்ளையடித்தது.
டுபாயில் இடம்பெற்றுவந்த இப்போட்டியில், 317 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களுடன், இன்றைய 5ஆவது நாளை ஆரம்பித்தது.
நாளின் ஆரம்பத்தில், சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான், ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், 6ஆவது விக்கெட்டாக, அணித்தலைவர் சப்ராஸ் அஹமட்டின் விக்கெட்டை டில்ருவான் பெரேரா கைப்பற்ற, தொடர்ச்சியாக ஏனைய விக்கெட்டுகளும் வீழ்ந்தன. இறுதியில், 248 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, 68 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.துடுப்பாட்டத்தில் அசத் ஷபீக் 112, சப்ராஸ் அஹமட் 68 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி, 482 ஓட்டங்களைப் பெற, பாகிஸ்தான் அணி 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இலங்கை அணி தனது 2ஆவது இனிங்ஸில், 96 ஓட்டங்களுக்கு மாத்திரம் ஆட்டமிழந்து, பாகிஸ்தான் அணிக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய போதிலும், இறுதியில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும், இலங்கைக்காக ஓட்டங்களைக் குவித்த திமுத் கருணாரத்ன தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .