2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இராஜினாமா செய்தார் நஜம் சேதி

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து நஜம் சேதி நேற்று இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான ஈஹாசன் மணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகத் தான் தெரிவுசெய்துள்ளதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் டுவீட் செய்திருந்தார்.

பாகிஸ்தானின் முன்னாள் தலைவரான இம்ரான் கானுடன் நஜம் சேதி மோசமான உறவைக் கொண்டிருந்த நிலையில், இம்ராத் கான் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து நஜம் சேதி விலகுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .