Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை, 72 ஓட்டங்களால் வெற்றிகொண்டே, இத்தொடரை இலங்கை கைப்பற்றியது.
244 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 20 ஓட்டங்களுடன் இன்றைய 5ஆவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. ஷாய் ஹோப்பும் டெரன் பிராவோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவ்வணி ஒரு விக்கெட்டை இழந்து 80 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்டது. ஆனால், ஹோப் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டன. 58 ஓட்டங்களுக்கு அவ்வணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இறுதி விக்கெட்டுக்காகப் பெறப்பட்ட 33 ஓட்டங்களே, அந்த இனிங்ஸின் 2ஆவது அதிகூடிய இணைப்பாட்டமாக அமைய, மேற்கிந்தியத் தீவுகள் அணி 171 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
துடுப்பாட்டத்தில் டெரன் பிராவோ 61 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 35 ஓட்டங்களையும் அறிமுக வீரர் ஜோமல் வரிக்கன் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும் மிலிந்த சிரிவர்தன 3 விக்கெட்டுகளையும் டில்ருவான் பெரேரா, தம்மிக்க பிரசாத் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 200 ஓட்டங்களைப் பெற, மேற்கிந்தியத் தீவுகள் அணி 163 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மீண்டும் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 206 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு 244 என்ற இலக்கை வழங்கியது.
இப்போட்டியில் 68 ஓட்டங்கள், 42 ஓட்டங்கள் என முக்கியமான ஓட்டங்களைப் பெற்றதோடு மாத்திரமல்லாது, போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிலிந்த சிரிவர்தன, இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.
தொடரின் நாயகனாக, ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
15 minute ago
26 minute ago
40 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
40 minute ago
56 minute ago