Shanmugan Murugavel / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க முகவரங்களிலிருந்து, விரைவில் தேவையான அனுமதிகளை டெல்லி பெறாதவிடத்து, இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியை நடாத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இந்நிலையில், மேற்படி விடயம் தொடர்பில், டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு மின்னஞ்சலொன்று அனுப்பியதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் அனுராக் தாகூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாளை வியாழக்கிழமை (28) வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை காலக்கெடு விதித்துள்ளதாக தெரிவித்த தாகூர், எங்களால் நீண்ட நேரம் பொறுத்திருக்க முடியாது எனவும் டெல்லியானது மேற்படி அனுமதியை பெறத்தவறும் பட்சத்தில் கான்பூர், ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஏதாவதொரு இடத்தில் போட்டி நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற, தென்னாபிரிக்கா, இந்தியாவிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னரும் போட்டி இடம்பெறுமா என்று சந்தேகம் நிலவியிருந்தநிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் மேற்படி விடயத்தில் தலையிட்டு, டெல்லி மாநகரசபையை அனுமதி வழங்குமாறு பணித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .