Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 06 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான, இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின், பல்லேகெலயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவாக வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, மூன்று விக்கெட்டுகளைக் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், 49 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்திசெய்த மக்ஸ்வெல், 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ட்ரவிஸ் ஹெட் 18 பந்துகளில் 45 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 22 பந்துகளில் 36 ஓட்டங்களையும் டேவிட் வோணர் 16 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சச்சித்திர சேனநாயக்க, சுரங்க லக்மால், திஸர பெரேரா, சச்சித் பத்திரண ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி, முறையே 49, 51, 58, 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். லக்மால் தவிர ஏனைய மூவரும், தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். கசுன் ரஜித்த, 3 ஓவர்களில் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
264 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 85 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. டில்ஷானை முதலாவது ஓவரிலேயே இழந்த இலங்கை அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
துடுப்பாட்டத்தில் டினேஷ் சந்திமால் 58 (43), சாமர கப்புகெதர 43 (25), குசல் மென்டிஸ் 22 (13) ஆகியோரே, ஓரளவு போட்டித் தன்மையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார்க், ஸ்கொட் போலன்ட் இருவரும் தலா 4 ஓவர்களில் தலா 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, கிளென் மக்ஸ்வெல் தெரிவானார்.
17 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago