2025 ஜூலை 12, சனிக்கிழமை

இலங்கை வரும் இந்தியா?

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஓகஸ்டில் குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளை உள்ளடக்கிய தொடரொன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் இலங்கை கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

பங்களாதேஷுக்கான இந்தியாவின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்தே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு உத்தியோகபூர்வமாகா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இன்னும் பதிலளிக்கவில்லை.

மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளை உள்ளடக்கிய தொடரையே இலங்கை கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது.

ஆசியக் கிண்ணத் தொடரைப் பொறுத்தே இத்தொடர் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள், தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கருடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் தேவஜித் சைகியா கலந்துரையாடிய பின்னரே இலங்கை கிரிக்கெட் சபைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பதிலளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .