2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இலங்கை அணியில் மீண்டும் மஹேல ஜயவர்தன

Freelancer   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இதனை தெரிவித்தார்.

அதன்படி, இலங்கை அணி ஒக்டோபர் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ள நிலையில், ஒக்டோபர் 6ஆம் திகதி இலங்கை அணியுடன் மஹேல அவுஸ்திரேலியாவில் இணைந்து கொள்ளவுள்ளார்.

அன்றிலிருந்து போட்டித்தொடர் முடியும் வரை மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இருப்பார் என ஏஷ்லி டி சில்வா மேலும் தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .