2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஏற்கெனவே இலங்கை இழந்துள்ள நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஐந்தாவது போட்டி இடம்பெறவுள்ளது.

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த போட்டியில் ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்த இலங்கை, அதைத் தொடந்து இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளுமா என்பது கேள்விக்குரியதொன்றாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது கணுக்கால் காயத்துக்குள்ளான இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோ, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நான்காவது போட்டியில் விளையாடியிருக்காத நிலையில், இப்போட்டியிலும் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள இங்கிலாந்துக்கெதிரான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தினேஷ் சந்திமால் இடம்பெற்றுள்ளபோதும் திஸர பெரேரா அணித்தலைவராக இடம்பெற்றுள்ளதுடன், அஞ்சலோ மத்தியூஸ் குழாமில் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்ட குழாம் பின்வருமாறு,

  1. திஸர பெரேரா (அணித்தலைவர்), 2. தினேஷ் சந்திமால், 3. நிரோஷன் டிக்வெல்ல, 4. குசல் பெரேரா, 5. குசல் மென்டிஸ், 6. தனஞ்சய டி சில்வா, 7. தசுன் ஷானக, 8. கமிந்து மென்டிஸ், 9. இசுரு உதான, 10. லசித் மலிங்க, 11. துஷ்மந்த சமீர, 12. அகில தனஞ்சய, 13. கசுன் ராஜித, 14. நுவான் பிரதீப், 15. லக்‌ஷன் சந்தகான்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .